கல்வெட்டுச் சொல்லகராதி

தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களில், தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் பரவலாக காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியானது தமிழ்  மொழியுடன் இயைந்து, வழக்கில் இருந்திருப்பதை காண முடிகிறது.

ஆதாரம்: கல்வெட்டுச் சொல்லகராதி –  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

கல்வெட்டுக்களில் உள்ள சம்ஸ்க்ருதச் சொற்கள் பொருள்
அக்ர மண்டபம் கோவிலில் முன் மண்டபம்
அகப் பரிவாரம் அரண்மனையில் பணி செய்யும் பரிவாரம்
அகோவணம் தரிசு நிலம்
அங்கமணி திரவியம் சீதனப் பணம்
அங்க ரக்ஷகன் மெய்க்காவலர்
அஞ்சஷ்ட சத்துச் சபை அஞ்சு + அஷ்ட + சத்து + சபை = கிராமச் சபை
அத்யயன விருத்தி வேதம் ஓத மானியம்
அர்த்த ஜாமப் புறம் அர்த்த ஜாமப் பூசை செய்ய மானியம்
அபய சாசனம் புகலிடம் அளிக்கும் பத்திரம்
அல்பமிறை தானிய வரி
அவிரோதம் விரோதம் இன்மை – நட்பு
அன்னிய நாமகரணம் இரவல் பெயரில் காரியம் செய்வது
அனாதி பாழ் நெடுங்காலமாக பாழடைந்த இடம்
ஆலேபனம் பூசுதல்
இரத்தக் காணிக்கை போரில் வீழ்ந்த வீரருக்கான மானியம்
உத்தமதானி சிறந்த தானம்
உதகதாரை நீரைத் தாரையாக வார்த்து தானம் செய்தல்
உப்பாயம் உப்பு வரி (ஆயம் = வரி)
உருத்திர கணம் சிவனடியார்
ஏகபோக இறையிலி வரி இல்லாமல் முழு கிராமம்
கடைக் காட்சி கண்காணித்தல்
கண்ட நாண் கழுத்து அணிவகை
கலசமாட்டுதல் கும்பாபிஷேகம்
காக பிந்து கரும்புள்ளி
குமார வர்க்கம் ராஜ குடும்பவம்சம்
கோ முகம் பசுவின் முகம்
சடங்கவி வேதத்தின் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள்
சதா சேவை நித்திய ஊழியம்
சதுராலை நாலு கால் மண்டபம்
சந்தானம் சந்ததி
சந்தியா தீபம் பகலும் இரவும் கூடும் சமயம் ஏற்றப்படும் தீபம்
சமய தர்மம் அவரவர் தொழிலுக்கு உரிய தர்மம்
ஜய பத்திரம் வெற்றிப் பத்திரம்
சர்வாதிகாரி பிரதான அதிகாரி (மந்திரி)
சரஸ்வதி பண்டாரம் புத்தகச் சாலை
சரீரம் உடல்
சாசுவதியம் சாசுவதம்
சாத்வீக தானம் பலனை எதிர்பாராமல் அளிக்கப்படும் தானம்
சிகரம் கோபுர விமான உச்சி
சிங்க பாதம் சிங்கத்தின் பாதம்
சிரப் பிரதானி தலைமைப் பிரதானி
சிவ யோகி சிவனடியார்
சிறு தனம் சொந்தப் பணம்
சீமா விவாதம் எல்லையைப் பற்றிய வழக்கு
சுவர்ணாதாயம் பொன்னாக இருக்கும் வரி
சூலத்தாபனம் சிவன்கோயில் நில எல்லைக் கல்நடுவது
செப்புப் பத்திரம் செப்பேடு
தக்ஷிண புஜம் நம்பிக்கை வாய்ந்த அதிகாரி – வலது கை
திரி காலம் காலை,உச்சி மற்றும் மாலை வேளை
திரு நயனம் கண்மலர்
தேவரடியார் கோவிலில் பணிபுரியும் பெண்கள்
பஞ்சவமுது பஞ்சாமிர்தம்
பரதேசி வெளிநாட்டவர்
பலி கோவில் பூசை
பள்ளிப் பீடம் ஆசனம்
பாகு வலயம் தோள்வளை
பிராணான்திகம் ஆயுள் முடியும் வரை
பிராப்தி அடைவது
புஷ்பத் தளிகை மலர்த்தட்டம்
பூமிப் புத்திரர் வேளாண் மக்கள்
பூர்வாசாரம் முன்னாள் வழக்கம்
மகா சாகை மரத்தின் கிளை
மகா தோரணம் அலங்கார தீபம்
மகா ஜனம் கிராம மக்கள்
மடம் துறவிகளின் சத்திரம்
மத்தியஸ்தன் நடுநிலை வகிப்பவர்
மார்க்காதாயம் சாலை வழி வரி
முஷ்டி முட்டி
மூலம் ஆதாரம்
யாக சாலை வேள்வி மண்டபம்
யாத்ரா தானம் போருக்கு முன் செய்யும் தானம்
ராஜத் துரோகம் அரசாங்கத்திற்கு விரோதம்
வருஷ காணிக்கை ஆண்டுதோறும் வழங்கப்படும் காணிக்கை
வாஸ்து கிருத்தியம் கட்டிட வேலை
வித்துவஜ் ஜனம் புலவர் கூட்டம்
வீர சேஷை போரில் இறந்த வீரருக்கான மானியம்
ஜல பவித்ரம் அபிஷேகம் பொழுது விக்ரகத்திற்கு ஒரு ஆடை
ஜன்ம பூமி தானம் அளிக்கப்பட்ட இடம்
ஜாதக தக்ஷிணை சன்மானம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s