Couplet-0079

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்-Chapter
The Possession of Love
0079அறம்இல்லறம்அன்புடைமை
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு. (௯)

Puraththurup Pellaam Evanseyyum Yaakkai
Akaththuruppu Anpi Lavarkku.

பரிமேலழகர் உரை:


இதன்பொருள்) யாக்கையகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு = யாக்கை யகத்தின்கண் (நின்று) (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்பு உடையரல்லாதார்க்கு;
புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் = ஏனைப் புறத்தின்கணின்று உறுப்பாவனவெல்லாம் (அவ்வறஞ் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

பரிமேலழகர் உரைவிளக்கம்

'புறத்துறுப்பாவன', இடனும் பொருளும் ஏவல்செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின், 'எவன்செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. யாக்கையிற் கண் முதலியஉறுப்புக்களெல்லாம்என்னபயனைச்செய்யும்மனத்தின்கணுறுப்பாகிய அன்பிலாதார்க்கு என்று உரைப்பாருமுளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை யறிக

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

Leave a comment