Couplet-0100

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்-Chapter
The Utterance of Pleasant Words
00100அறம்இல்லறம்இனியவை கூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய வுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru.

பரிமேலழகர் உரை:.

இனிய உளவாக இன்னாத கூறல்= அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறல்;
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று= இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

'கூற'வென்தனால் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்துநின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. `இனிய கனிகள்' என்றது, ஒளவையு்ண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை. 'இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய்போல நஞ்சானவற்றை. கடுஞ்சொற்சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் இன்னாத கூறலின் குற்றங்கூறப்பட்டது.

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

Leave a comment