Couplet-0096

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்-Chapter
The Utterance of Pleasant Words
0096அறம்இல்லறம்இனியவை கூறல்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin.

பரிமேலழகர் உரை:.

நல்லவை நாடி இனிய சொலின்= பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்;
அல்லவை தேய அறம் பெருகும்= அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

தேய்தல் தன் பகையாகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடியார், 51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறனாகாது என்பதாம்.
இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

Leave a comment