Couplet-0111

குள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம்-Chapter Impartiality
0111அறம்இல்லறம்நடுவு நிலைமை
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

தகுதி என ஒன்று நன்றே பகுதியான்
பால் பட்டு ஒழுக பெறின்.(01)

Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin.

பரிமேலழகர் உரை:.

தகுதி என ஒன்று நன்றே- நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று;
பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்= பகை நொதுமல் நண்பு என்னும் பகுதிதோறும் தன் முறைமையை விடாது ஒழுகப்பெறின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

தகுதியுடையதனைத் தகுதி என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆறன் உருபு தோறும் என்பதன் பொருட்டாய் நின்றது. பெறின் என்பது, அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது.
இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men[enemies, strangers and friends] is a pre-eminent virtue.


Leave a comment