Couplet-0418

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0418பொருள்  அரசியல்கேள்வி
Knowledge Through Listening
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பரிமேலழகர் உரை

கேட்பினும் கேளாத் தகையவே= தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்குமாயினும் செவிடாம் தன்மையவேயாம்;
கேள்வியால் தோட்கப்படாத செவி= கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.

விளக்கம்

ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையிற் 'கேளாத் தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். பழைய துளை துளையன்று என்பதாம்.