Couplet-0012

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்
Chapter
0012அறம்பாயிரம்வான்சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = (அவற்றை) உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.


பரிமேலழகர் உரைவிளக்கம்:

தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.
:

Leave a comment