Couplet-0062

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம்-Chapter
The Wealth of Children
0062அறம்இல்லறம்மக்கட்பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின். 

Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) எழுபிறப்பும் தீயவை தீண்டா = (வினைவயத்தாற் பிறக்கும்) பிறப்பு ஏழின் கண்ணும் (ஒருவனைத்) துன்பங்கள் சென்றடையா;
பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = (பிறரால்) பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயி னென்றவாறாயிற்று.
பிறப்பேழாவன:
"ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.#"
தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர்செய்யுந் தானதருமங்கட்கு அவர் நற்குணங் காரணமாகலின், ‘பண்பு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது.

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice

Leave a comment