Couplet – 0213

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0213அறம் இல்லறம்ஒப்புரவு அறிதல்
Social Responsibilities  
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற

பரிமேலழகர் உரை 

புத்தேள் உலகத்தும் ஈண்டும்= தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்;
ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது= ஒப்புரவு போல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.

பரிமேலழகர் உரை விளக்கம்

ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லாரும் ஒருதன்மையர் ஆதலான் புத்தேள் உலகத்து அரிது ஆயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதுஒன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெறற்கரிது என்று பாடம்ஓதிப் பெறுதற்குக் காரணம்அரிது என்று உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது