Couplet-0069

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம்-Chapter
The Wealth of Children
0069அறம்இல்லறம்மக்கட்பேறு
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய். 

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் = (தான்) பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;
தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் = தன்மகனைக் (கல்வி கேள்விகளான்) நிறைந்தானென்று (அறிவுடையார்) சொல்லக் கேட்ட தாய்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

கவானின்கட்❖ கண்ட பொதுவுவகையினுஞ் சால்புடையனெனக் கேட்ட சிறப்புவகை பெரிதாகலின் ‘பெரிதுவக்கும்’ எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையிற் ‘கேட்டதாய்’ எனவுங் கூறினார். ‘அறிவுடையார்’ என்பது வருவிக்கப்பட்டது. சான்றோரென்றற்கு உரியர் அவராகலின்.
தாயுவகைக்கு அளவின்மையின் அஃது இதனாற் பிரித்துக் கூறப்பட்டது.

The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

Leave a comment