Couplet – 0273

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0273அறம் துறவறம்கூடாவொழுக்கம்
Undesirable Conduct
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று  

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று 

பரிமேலழகர் உரை

(இதன்பொருள்) வலி இல் நிலைமையான் வல் உருவம்= மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன் வழிப்படுதல் ; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று= பசு, காவலர் கடியாமல் புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

இல்பொருள் உவமை. 'வலியில் நிலைமையான்' என்ற அடையானும், 'மேய்ந்தற்று' என்னும் தொழில் உவமையானும், வல்லுருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை, புலி புல் தின்னாது என்பதனானும், அச்சத்தானும் ஆம்; ஆகவே, வல்லருவம் கோடற்குப் பயன், அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து, வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்லுருவமும் கொண்டுநின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடியவழியே ஓடி மறைந்து, பிறர்க்குரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய 'பைங்கூழை மேய்ந்தாற் போலும்' என்ற உவமையான் அறிக.