Couplet-0427

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0427பொருள்  அரசியல்அறிவுடைமை
Wealth of Wisdom
அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லா தவர்.

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லா தவர்.

பரிமேலழகர் உரை

அறிவுடையார் ஆவது அறிவார்= அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறியவல்லார்;அறிவிலார் அஃது அறிகல்லாதவர்= அறிவிலராவார் அதனை முன்னறிய மாட்டாதார்.


விளக்கம்:

'முன்னறிதல்' முன்னே எண்ணியறிதல். 'அஃதறிகல்லாமை'யாவது வந்தாலறிதல். இனி, 'ஆவதறிவார்' என்பதற்குத் தமக்கு நன்மையறிவார் என்று உரைப்பாருமுளர்.