National Integration Through Thirukkural And Sanskrit
Equality at Birth
Varnashrama Dharma is one of the most debated concepts in modern India. Sanathana Dharma tradition defines ‘Jaati’ as caste and ‘Varna’ as ‘way of life’. Unfortunately, these words have been misused to divide Indians by those, who are making benefits from it. The Vedas, Upanishads or Srimad Bhagavad Gita have never emphasized division of mankind on caste lines. Instead, they have given prominence to ‘way of life’.
The actual word used for Brahmana, Kshatriya, Vaishya and Shudra is for defining Varna and not Jaati. Varna means profession or the way of life that one has adopted by his own choice or chance. Thus, while Jaati is determined by birth, Varna is our own choice.
In Bhagavad Gita (4.13) Lord Krishna says:
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஶ: |
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||
He explains that Varna is bestowed on the basis of the inherent nature of an individual, which is a combination of three Gunas (qualities) namely Sattva, Rajas, and Tamo and his Prarabdha Karma.
Although God is the creator of the scheme of the world, yet he is the non-doer. This is similar to the rain. Just as rain water falls equally on the forest, yet from some seeds huge banyan trees sprout, from other seeds beautiful flowers bloom, and from some thorny bushes emerge. The rain, which is impartial, is not answerable for this difference. In the same way, God provides the souls with the energy to act, but they are free in determining what they wish to do with it; God is not responsible for their actions.
In the Shanti Parva of Mahabharatha, a Brahmin is described as one who leads a truthful, forgiving, and kind living. It clearly mentions that a Brahmin cannot be a Brahmin just because he is born to a Brahmin family, nor is a Shudra a Shudra because his parents are Shudras.
Manusmrti (2.157) says, “Just as a wooden toy elephant cannot be a real elephant and a stuffed deer cannot be a real deer, even so, without the knowledge of Scriptures and Vedas and not having developed the intellect an individual even if born to a Brahmin cannot be considered a Brahmin”.
யதா² காஷ்ட²மயோ ஹஸ்தீ யதா² சர்மமயோ ம்ருக³:
யஶ்ச விப்ரோ(அ)தீ³யானஸ் த்ரயஸ்தே நாம பி³ப்⁴ரதி
Over the last couple of centuries, people with non-spiritual ideologies have been continuously misleading people about the word Brahman and interpreted Varnashrama Dharma as a retrograde caste system placing Brahman, deliberately at the top of the hierarchy to enable suppression of other sections of society. They distorted the fact, that the Caste system is birth-oriented whereas Varna system is role-oriented.
History has numerous examples of people from different castes revered as Brahmans by virtue of their spiritual contributions. Valmiki, author of the Ramayana, was a robber. Vyasa, author of the Mahabharata, was the son of a fisherwoman and Lord Krishna was a Yadav (cowherd).
Saint Thiruvalluvar in the three following couplets emphasizes that ‘Everybody is equal at birth. Only by practice of virtues and execution of responsibilities associated with roles, does one attain greatness”.
பிறப்பினால் பெருமையோ இழிவோ உண்டாவதில்லை என்கிறது குறள்.
- அருளுடையவன் அந்தணன்; அருளற்றவன் இழிந்தோன்;
- ஒழுக்கமுடையவன் உயர்ந்தோன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தோன்;
- தொழில்திறன் கொண்டவன் மேலானவன்; தொழில்திறன் குறைபாடுடையவன் கீழானவன்;
இவ்வாறு அறத்தாலும், ஒழுக்கத்தாலும், தொழில் செய்திறனாலும் பெருமை மக்களுக்கு உண்டேயன்றிப் பிறப்பால் உயர்ச்சியோ தாழ்ச்சியோ இல்லை என்பது வள்ளுவரின் உறுதியான கோட்பாடு.
பரிமேலழகர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். ‘அந்தணர்’ என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
பிற உரைகள்:
அற உணர்வும் அருள் நெஞ்சமும் உடையவர் இந்தநாட்டில் இந்தச்சமயத்தில் இந்தக்குலத்தில் பிறத்தல் வேண்டும் என்பதில்லை. அவர்க்கு நாடு, நிறம், மொழி, சமயம், சாதி போன்ற வேற்றுமைகள் தோன்றுவதில்லை. அறநெஞ்சம் படைத்தவர் யாராயினும் எக்குடிப் பிறந்தவராயினும் எந்நிலையில் இருப்போராயினும் இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் அந்தணர் ஆவர். செந்தண்மை பூண்டொழுகும் அறநெஞ்சம் இல்லாதவர் எக்குலத்தில் பிறந்தாலும் அந்தணராகார். இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் இல்லாதவர், அந்தணர் எனப்படமாட்டார் என்பதும், எக்குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பது இப்பாடல்வழி தெளிவுறுத்தப்பட்டது.
Those who dedicate themselves to the principles of universal love, sympathy and compassion towards all living beings, are known by the name of “Anthanar” (persons having chosen the ascetic path)
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் ‘குடிமையாம்’ என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).
The prestige of the society is based on the observance of individual discipline in line with high moral standards of the community as well as family traditions and any deterioration will be deemed as mean and ignoble birth.
பரிமேலழகர் உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் – பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு – நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் ‘பிறப்பு ஒக்கும்’ என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், ‘சிறப்பு ஒவ்வா’ என்றும் கூறினார்.).
வேறு சில உரையாசிரியர்கள்
சிலர், செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுகிறது என்ற உரையை வளப்படுத்தும் நோக்கில், செய்தொழில் வேற்றுமையால் என்பதை ‘தொழில் செய் வேற்றுமை’யால் என வாசித்து, ‘பிறப்பில் அனைவரும் சமம்; அவர்கள் செய்யும் தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அவர்கள் செய்யும் தொழில் திறமையில்தான் வேறுபாடுகள் உண்டு; அவையே ஒருவரது பெருமை-சிறுமைக்குக் காரணம்’ என்று இக்குறளுக்கு உரை வரைவர். தொழில் என்ற இடத்தில் தொழில் செய்திறன் எனக் கூறி ‘உயிர்கள் தொழில் செய்யும் ஆற்றலினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கின்றன’ எனச் சிலர் பொருள் உரைத்தனர். தொழில் என்பதற்குச் செயல் எனப் பொருள் கொண்டு, நல்ல செயல்கள் தீய செயல்களால் வேறுபாடுகள் அமைகின்றன என்றவகையிலும் உரைகள் உள.
Birth is a factor common to all. But a person’s sense of greatness or of disgrace differentiates him from others due to he diverse actions carried out by him.