couplet-0035

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்-Chpter
Assertion of the Strength of Virtue
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 

Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram.


பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) அழுக்காறு = (பிறர் ஆக்கம்) பொறாமையும்;
அவா = (புலன்கண்மேற் செல்கின்ற) அவாவும்;
வெகுளி = (அவை ஏதுவாகப் பிறர்பால் வரும்) வெகுளியும்;
இன்னாச்சொல் = (அதுபற்றி வரும்) கடுஞ்சொல்லும் (ஆகிய);
நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.

பரிமேலழகர் உரை விளக்கம்:

இதனான், ‘இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது’ என்பதூஉங் கொள்க.
இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter
speech.

Leave a comment