Couplet-0365

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0365அறம்துறவறம்அவாவறுத்தல்
Giving up Desires
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையர்
அற்றாக அற்றது இலர்.

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையர்
அற்றாக அற்றது இலர்.

பரிமேலழகர் உரை

அற்றவர் என்பார் அவா அற்றார்= பிறவி அற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள்; மற்றையார் அற்றாக அற்றது இலர்= பிற ஏதுக்கள் அற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போல் பிறவியற்றிலர்.

விளக்கம்

இதனால் அவாவறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும், எதிர்மறை முகத்தானும் கூறப்பட்டது.