Couplet-0411

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0411பொருள்  அரசியல்கேள்விKnowledge Through Listening
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

பரிமேலழகர் உரை

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்= ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வருஞ் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை= அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினுந் தலையாகலான்.

விளக்கம்

செவியான் வருஞ் செல்வம் கேள்வியான் எல்லாப் பொருளையும் அறிதல். பிறசெல்வங்கள் பொருளான் வருவன. அவை நிலையாவாகலானும், துன்ப விளைவினவாகலானும், இது 'தலை'யாயிற்று. அவற்றை யொழித்து இதனையே செய்க என்புது குறிப்பெச்சம்.