Couplet-0428

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0428பொருள்  அரசியல்அறிவுடைமை
Wealth of Wisdom
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பரிமேலழகர் உரை:

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை- அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்- அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.

விளக்கம்:

பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதிபற்றி 'அஞ்சுவது' என்றார். 'அஞ்சாமை', எண்ணாது செய்து நிற்றல். 'அஞ்சுதல்' எண்ணி்த் தவிர்தல். அதுகாரியமன்று என்று இகழப்படாதென்பார் 'அறிவார் தொழில்'1 என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்சவேண்டும்இடம் கூறியவாறு.
இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.