Gandhiji on Sanskrit

சம்ஸ்க்ருத மொழிப் பற்றி காந்தி அடிகள்Gandhiji’s views on Sanskrit (சத்திய சோதனை My Experiments with Truth)

சம்ஸ்க்ருதம் எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. வடிவவியலில் (Geometry) எதுவும் மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆனால் சமஸ்க்ருதத்தில் எல்லாமே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்தேன். நான்காவது வகுப்பிலிருந்தே இந்த பாடம் துவங்கி விடுகிறது. நான் ஆறாம் வகுப்பை அடைந்த போது மிகவும் வருத்தம் அடைந்தேன். சமஸ்க்ருத ஆசிரியரும் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தினார்.

சமஸ்க்ருத ஆசிரியர்களுக்கும் பார்சி மொழி ஆசிரியர்களுக்கும் இடையே போட்டி நிலவியது. பார்சி மொழி ஆசிரியர் மாணவர்களிடம் கடுமை இன்றி இருந்தார். “பார்சி மொழி மிகவும் எளிது, ஆசிரியரும் சாது, எல்லா மாணவர்களையும் தயையுடன் நடத்துகிறார்” என்று மாணவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். பார்சி சுலபம் என்பது என்னை ஈர்க்கவே ஒரு நாள் பார்சி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இதனால் சமஸ்க்ருத ஆசிரியர் மிகவும் வருந்தினார். என்னை அழைத்து, “உன் தந்தை ஒரு வைணவர் என்பதை மறந்து விட்டாயா? உனக்கான தர்மத்தின் தொடர்புடைய ஒரு மொழியை கற்க ஏன் உனக்கு ஆசையில்லாமல் போனது? உங்களுக்கு என் சக்தி, புத்தி அனைத்தையும் கொண்டு சமக்ஸ்ருதம் சொல்லித் தருவதே என் ஆசை. எந்தெந்த பாடங்கள் கடினமாக இருக்கிறதோ அதுவே போகப் போக சுவாரசியமானதாகும். மனதை தளரவிட வேண்டாம். மறுபடி சமஸ்க்ருத வகுப்பிலேயே வந்து உட்கார்” என்றார்.

இவ்வாறு அவர் சொன்னதைக் கேட்டு வெட்கமுற்றேன். அவரது அன்பை புறக்கணிக்க முடியவில்லை. இன்று கிருஷ்ண சங்கர பாண்ட்யா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டிருக்காவிடில் இப்போது நமது பவித்ரமான புத்தகங்களை படிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்காது. இந்துக்களில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அவசியம் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

Sanskrit, however, proved a harder task. In geometry there was nothing to memorize, whereas in Sanskrit, I thought, everything had to be learnt by heart. This subject also was commenced from the fourth standard. As soon as I entered the sixth I became disheartened. The teacher was a hard taskmaster, anxious, as I thought, to force the boys.

There was a sort of rivalry going on between the Sanskrit and the Persian teachers. The Persian teacher was lenient. The boys used to talk among themselves that Persian was very easy and the Persian teacher very good and considerate to the students. The ‘easiness’ tempted me and one day I sat in the Persian class. The Sanskrit teacher was grieved. He called me to his side and said: ‘How can you forget that you are the son of a Vaishnava father ? Won’t you learn the language of your own religion? If you have any difficulty, why not come to me? I want to teach you students Sanskrit to the best of my ability. As you proceed further, you will find in it things of absorbing interest. You should not lose heart. Come and sit again in the Sanskrit class.’

This kindness put me to shame. I could not disregard my teacher’s affection. Today I cannot but think with gratitude of Krishna Shankar Pandya. For if I had not acquired the little Sanskrit that I had learnt then, I should have found it difficult to take any interest in our sacred books. In fact I deeply regret that I was not able to acquire a more thorough knowledge of the language, because I have since realized that every Hindu boy and girl should possess sound Sanskrit learning.