தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களில், தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் பரவலாக காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியானது தமிழ் மொழியுடன் இயைந்து, வழக்கில் இருந்திருப்பதை காண முடிகிறது.
ஆதாரம்: கல்வெட்டுச் சொல்லகராதி – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
| கல்வெட்டுக்களில் உள்ள சம்ஸ்க்ருதச் சொற்கள் | பொருள் |
| அக்ர மண்டபம் | கோவிலில் முன் மண்டபம் |
| அகப் பரிவாரம் | அரண்மனையில் பணி செய்யும் பரிவாரம் |
| அகோவணம் | தரிசு நிலம் |
| அங்கமணி திரவியம் | சீதனப் பணம் |
| அங்க ரக்ஷகன் | மெய்க்காவலர் |
| அஞ்சஷ்ட சத்துச் சபை | அஞ்சு + அஷ்ட + சத்து + சபை = கிராமச் சபை |
| அத்யயன விருத்தி | வேதம் ஓத மானியம் |
| அர்த்த ஜாமப் புறம் | அர்த்த ஜாமப் பூசை செய்ய மானியம் |
| அபய சாசனம் | புகலிடம் அளிக்கும் பத்திரம் |
| அல்பமிறை | தானிய வரி |
| அவிரோதம் | விரோதம் இன்மை – நட்பு |
| அன்னிய நாமகரணம் | இரவல் பெயரில் காரியம் செய்வது |
| அனாதி பாழ் | நெடுங்காலமாக பாழடைந்த இடம் |
| ஆலேபனம் | பூசுதல் |
| இரத்தக் காணிக்கை | போரில் வீழ்ந்த வீரருக்கான மானியம் |
| உத்தமதானி | சிறந்த தானம் |
| உதகதாரை | நீரைத் தாரையாக வார்த்து தானம் செய்தல் |
| உப்பாயம் | உப்பு வரி (ஆயம் = வரி) |
| உருத்திர கணம் | சிவனடியார் |
| ஏகபோக இறையிலி | வரி இல்லாமல் முழு கிராமம் |
| கடைக் காட்சி | கண்காணித்தல் |
| கண்ட நாண் | கழுத்து அணிவகை |
| கலசமாட்டுதல் | கும்பாபிஷேகம் |
| காக பிந்து | கரும்புள்ளி |
| குமார வர்க்கம் | ராஜ குடும்பவம்சம் |
| கோ முகம் | பசுவின் முகம் |
| சடங்கவி | வேதத்தின் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள் |
| சதா சேவை | நித்திய ஊழியம் |
| சதுராலை | நாலு கால் மண்டபம் |
| சந்தானம் | சந்ததி |
| சந்தியா தீபம் | பகலும் இரவும் கூடும் சமயம் ஏற்றப்படும் தீபம் |
| சமய தர்மம் | அவரவர் தொழிலுக்கு உரிய தர்மம் |
| ஜய பத்திரம் | வெற்றிப் பத்திரம் |
| சர்வாதிகாரி | பிரதான அதிகாரி (மந்திரி) |
| சரஸ்வதி பண்டாரம் | புத்தகச் சாலை |
| சரீரம் | உடல் |
| சாசுவதியம் | சாசுவதம் |
| சாத்வீக தானம் | பலனை எதிர்பாராமல் அளிக்கப்படும் தானம் |
| சிகரம் | கோபுர விமான உச்சி |
| சிங்க பாதம் | சிங்கத்தின் பாதம் |
| சிரப் பிரதானி | தலைமைப் பிரதானி |
| சிவ யோகி | சிவனடியார் |
| சிறு தனம் | சொந்தப் பணம் |
| சீமா விவாதம் | எல்லையைப் பற்றிய வழக்கு |
| சுவர்ணாதாயம் | பொன்னாக இருக்கும் வரி |
| சூலத்தாபனம் | சிவன்கோயில் நில எல்லைக் கல்நடுவது |
| செப்புப் பத்திரம் | செப்பேடு |
| தக்ஷிண புஜம் | நம்பிக்கை வாய்ந்த அதிகாரி – வலது கை |
| திரி காலம் | காலை,உச்சி மற்றும் மாலை வேளை |
| திரு நயனம் | கண்மலர் |
| தேவரடியார் | கோவிலில் பணிபுரியும் பெண்கள் |
| பஞ்சவமுது | பஞ்சாமிர்தம் |
| பரதேசி | வெளிநாட்டவர் |
| பலி | கோவில் பூசை |
| பள்ளிப் பீடம் | ஆசனம் |
| பாகு வலயம் | தோள்வளை |
| பிராணான்திகம் | ஆயுள் முடியும் வரை |
| பிராப்தி | அடைவது |
| புஷ்பத் தளிகை | மலர்த்தட்டம் |
| பூமிப் புத்திரர் | வேளாண் மக்கள் |
| பூர்வாசாரம் | முன்னாள் வழக்கம் |
| மகா சாகை | மரத்தின் கிளை |
| மகா தோரணம் | அலங்கார தீபம் |
| மகா ஜனம் | கிராம மக்கள் |
| மடம் | துறவிகளின் சத்திரம் |
| மத்தியஸ்தன் | நடுநிலை வகிப்பவர் |
| மார்க்காதாயம் | சாலை வழி வரி |
| முஷ்டி | முட்டி |
| மூலம் | ஆதாரம் |
| யாக சாலை | வேள்வி மண்டபம் |
| யாத்ரா தானம் | போருக்கு முன் செய்யும் தானம் |
| ராஜத் துரோகம் | அரசாங்கத்திற்கு விரோதம் |
| வருஷ காணிக்கை | ஆண்டுதோறும் வழங்கப்படும் காணிக்கை |
| வாஸ்து கிருத்தியம் | கட்டிட வேலை |
| வித்துவஜ் ஜனம் | புலவர் கூட்டம் |
| வீர சேஷை | போரில் இறந்த வீரருக்கான மானியம் |
| ஜல பவித்ரம் | அபிஷேகம் பொழுது விக்ரகத்திற்கு ஒரு ஆடை |
| ஜன்ம பூமி | தானம் அளிக்கப்பட்ட இடம் |
| ஜாதக தக்ஷிணை | சன்மானம் |